குடும்பத்தினரின் அலட்சியத்தால் தாயும், சேயும் பலியான சோகம்.. அன்றைய காலமும், இன்றைய காலமும் ஈடாகாது..! 
                                    
                                    
                                   Perambalur woman Azhagammal Death Incorrect Pregnancy Treatment in House 
 
                                 
                               
                                
                                      
                                            பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயவர்மன். இவரது மனைவி அழகம்மாள். இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் முதல் குழந்தைக்காக அழகம்மாள் கருவுற்று இருந்துள்ளார். விஜயவர்மனின் அண்ணன் விக்கிரமராஜா அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்து வந்த நிலையில், வீட்டிலேயே இயற்கை முறைப்படி பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் என கணவரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். 
பி.எஸ்.சி நர்சிங் படித்து இருந்த அழகம்மாளும் இதற்கு சம்மதம் தெரிவிக்கவே, இந்த நிலையில் அழகம்மாள் கர்ப்பமாக இருக்கும் தகவல் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் வீட்டிற்கு சென்ற சுகாதாரத்துறையினர், அழகம்மாளை மருத்துவ பரிசோதனைக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளனர். அதற்கு தம்பதிகள் இருவரும் மறுத்துவிட்ட நிலையில், தன்னுடைய மனைவிக்கு வீட்டிற்கு பிரசவம் பார்த்துக் கொள்வதாகவும், மருத்துவமனையில் மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சையில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். 

பின்னர் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் அழகம்மாளை பரிசோதனைக்கு அழைத்த சுகாதார அலுவலர்கள், மீண்டும் தம்பதிகள் மறுப்பு தெரிவித்ததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் திடீரென அழகம்மாளுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. குழந்தை உடல் பாதி வெளியே வரும் போதே அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே, அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 
வயிற்றில் இருந்த குழந்தை அழுகிய நிலையில் சடலமாக எடுக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்ய கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், திருச்சி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அழகம்மாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கணவர் விஜயவர்மன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அன்றைய காலங்களில் பிரசவங்கள் வீட்டில் நடைபெற்றது என்றால், அன்று உள்ள உணவு முறைகளும், மக்கள் வாழ்ந்த சூழ்நிலைகளும் வேறு. இன்றுள்ள நிலையில் நாம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் பின்பற்றிய எந்த ஒரு விஷயத்தையும், உணவு முறைகளையும் பின்பற்றாமல் வாழ்ந்துகொண்டு இருக்கும் தருணத்தில், இன்டர்நெட்டில் யூடியூப் பார்த்து பிரசவத்தை மேற்கொள்ளலாம் என இருந்தால், என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த துயரமே சாட்சி. தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       Perambalur woman Azhagammal Death Incorrect Pregnancy Treatment in House