திரைப்பட இயக்குனர் கொலை வழக்கு.. பாஜக மாவட்ட துணைத் தலைவர் கைது.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூரில் திரைப்படம் இயக்குனர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரையை சேர்ந்தவர் செல்வராஜ். திரைப்படம் இயக்குனரான இவர் பெரம்பலூரில் கடந்த ஜூன் 5-ம் தேதி தனியார் விடுதி பாரில் மது அருந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் செல்வராஜை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர்.

 இதனையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் அபினாஷ், நவீன், பிரேம் ஆனந்த், அவரது மனைவி ரமணி, மற்றொரு நவீன், 17 வயது சிறுவன் மற்றும் ரேவதி, நித்யா ஆகிய 8 பேரை கைது மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சரவணன் மற்றும் தன்ராஜ் ஆகிய 2 பேர் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான சேலம் சின்ன திருப்பதி சேர்ந்த தீனா, சேலம் நெத்திமேட்டை சேர்ந்த மூர்த்தி, மற்றும் கமல் ஆகியோரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய பெரம்பலூர் மாவட்ட பாஜக துணை தலைவர் ஜெயபாலாஜி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பெரம்பலூர் போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambalur director murder case bjp admin arrested


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->