திருமாவளவன் கோரிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால்... அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மரியாதை  பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் செலுத்தினார்.

மேலும், அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவிக்கையில், "நண்பர் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு செய்தி கேட்ட அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. தமிழ்நாட்டின் சமூக நீதிக்கு மிகப்பெரிய பின்னடைவு.

பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும், ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக சொல்லி வந்தவர் ஆம்ஸ்ட்ராங்.

ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசிக தலைவர் திருமாவளவன் சிபிஐ விசாரணை வேண்டும் என கூறுகிறார், அதனை நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ வேண்டாம் என்று திருமாவளவன் கூறுகிறார், இங்கு ஒரு பதில் அங்கு ஒரு பதில் பேசுகிறார்.

தமிழ்நாட்டில் உள்ள கூலிப்படை கலாச்சாரத்தை வேரோடு அறுக்க வேண்டும். சேலத்தில் அதிமுக நிர்வாகி, கடலூரில் பாமக நிர்வாகி, எனத் தொடர்ந்து பல பேர் படுகொலை செய்யப்பட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டில் பெரிய தலைவரின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர், அதனை போக்க கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்.

ஸ்காட்லாந்துக்கு நிகரான சுதந்திரத்தை நமது காவல்துறைக்கும் வழங்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்" என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pattali Makkal Katchi Anbumani Ramadoss Say About Thirumavalavan statement


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->