நாடு முழுவதும் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது! அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக நாடு முழுவதும் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என மதுரை பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தகவல் தெரிவித்துள்ளார்.

செப்.20ம் தேதி இரவு 8 மணி முதல் 23ம் தேதி காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என மதுரை பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் அறிவிப்பு வெளியுட்டுள்ளார்.

இதுகுறித்த அந்த அந்த அறிவிப்பில், இந்தியா முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக 20.09.2024 (வெள்ளிகிழமை) இரவு 20.00 மணி முதல் 23.09.2024 (திங்கள்கிழமை) காலை 06.00 வரை, பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 

எனவே பாஸ்போரட் விண்ணப்பதாரர்கள் அனைத்துவிதமான சேவைகளுக்கும் (பாஸ்போரட் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்வதற்கும் மற்ற சந்தேகங்களுக்கும்) தொழில்நுட்ப பராமரிப்பு முடிந்த பின்பு பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலக தொலைப்பேசி 0452-2521205 மற்றும் 0452-2521204 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Passport Seva Madurai  


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->