பதவியேற்ற 27 நாளில் பறிபோயுள்ள பிரதமர் பதவி; பிரான்ஸ் அரசியலில் சலசலப்பு..! - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடான பிரான்சின் பிரதமராக இருந்த பிரான்சுவா பேய்ரூ தாக்கல் செய்த பட்ஜெட், பல தரப்பினரையும் அதிருப்தி அடைய செய்துள்ளது. இதைத் தொடர்ந்து நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற்றது. இதில் அவர் தோல்வி அடைந்துள்ள நிலையில், ஆட்சி கவிழ்ந்துள்ளது. 

இதனையடுத்து , கடந்த செப்டம்பர் 09-இல் தான் பிரான்சின் 47-வது பிரதமராக ராணுவ அமைச்சராக இருந்த செபஸ்டியன் லெகுர்னு பதவியேற்றார். பதவியேற்ற சில வாரங்களில், அமைச்சரவையை நியமித்த சில மணி நேரங்களிலும் அவர் பதவி பறிபோயுள்ளமை பரபரப்பாக பேசப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக நடந்த ஆலோசனைக்குப் பின், நேற்று அவர், அமைச்சரவையை நியமித்து, அதன் முதல் கூட்டத்தை நேற்று பிற்பகல் நடத்தத் திட்டமிட்டார். இதன் போது ஏற்கனவே அமைச்சராக இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதால் எதிர்க்கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் சிக்கன பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு பிளவுப்பட்ட பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் கடினமான சூழ்நிலையை செபஸ்டியன் லெகுர்னு எதிர்கொண்டார்.

இந்நிலையிலேயே அவர் தன் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். தற்போது பிரான்சின் கடன் உயர்ந்துள்ள நிலையிலும், அரசியல் நெருக்கடி காரணமாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், அவரது பதவி விலகல் கடிதத்தை அதிபர் இமானுவேல் மேக்ரானும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து, பிரான்சின் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து, அதிபர் மேக்ரான் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. பிரான்சில் அதிபர் மேக்ரான் ஆட்சியில் ஏழாவது முறையாக பிரதமர் மாறியுள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ஒரே ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட நான்காவது பிரதமராக லெகுர்னு இருக்கிறார். அவரது அரசே பிரான்ஸ் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் ஆட்சி செய்த அரசாக பணியாற்றியுள்ள சோகமான சாதனைக்கு ஆளாகியுள்ளது. பதவியேற்ற 27 நாட்களில் அவர் ராஜினாமா செய்திருப்பது பிரான்ஸ் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

French Prime Minister Sebastian Lecornu resigns


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->