நிலக்கரி இறக்குமதி ஊழல், 700 கோடி கல் குவாரி ஊழல்.. தமிழ்நாட்டை தலை குனிய விடலாமா முதல்வர் ஸ்டாலின்? அறப்போர் இயக்கம் கேள்வி!
arappor iyakkam cm mk stalin dmk scam
அறப்போர் இயக்கம் ஜெயராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் குடும்பம் மூலமாக சுருட்டிய ஜி.எஸ்.டி சாலை 5 ஏக்கர் அரசு நிலத்தை முதல்வர் ஸ்டாலின் மீட்காமல் இருப்பது ஏன் ?
கிறிஸ்டி ரேஷன் போக்குவரத்து டெண்டரை ரத்து செய்யாமல் கிறிஸ்டி ஊழல்களை முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பது ஏன் ?
அதானி ஊழலுக்கு எதிராக போராட கூட கூடாது என்று அறப்போருக்கு முதல்வர் கீழ் இயங்கும் காவல்துறை அனுமதி மறுத்து அந்த நிலக்கரி இறக்குமதி ஊழல் மீது லஞ்ச ஒழிப்பு துறை FIR கூட பதியாமல் முதல்வர் ஸ்டாலின் அதானி ஊழல்களை காப்பாற்றுவது ஏன் ?
திருநெல்வேலி 7௦௦ கோடி கல் குவாரி ஊழல் மீது நடவடிக்கை எடுக்காமல் தினமும் சட்டவிரோதமாக நூற்றுக்கணக்கான லாரிகளை கேரளா அனுப்புவது ஏன் ??
இவ்வளவு ஊழல் மூலம் தமிழ்நாட்டை தலை குனிய விடலாமா முதல்வர் ஸ்டாலின்?? என்று கேள்வி எழுப்பியுள்ளது.
அடுத்து அறப்போர் வெளிக்கொண்டு வரும் ஊழல் மீதாவது நடவடிக்கை எடுப்பீங்களா ?
English Summary
arappor iyakkam cm mk stalin dmk scam