நடுவழியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் - 10 கிலோ மீட்டர் குழந்தையின் சடலத்தைச் தூக்கிச் சென்ற பெற்றோர்.! - Seithipunal
Seithipunal


நடுவழியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் - 10 கிலோ மீட்டர் குழந்தையின் சடலத்தைச் தூக்கிச் சென்ற பெற்றோர்.!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அல்லேரி மலைகிராமத்திற்கு உட்பட்ட அத்திமரத்து கொல்லை பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜி- பிரியா தம்பதியினர். கூலித் தொழிலாளியான இவர்களுக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற மகள் உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது தனுஷ்காவை நல்ல பாம்பு கடித்துள்ளது. 

இதைப்பார்த்த குழந்தையின் பெற்றோர் தனுஷ்காவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், அந்த கிராமத்தில் சாலை வசதி இல்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு செல்ல நீண்ட நேரமாகி, குழந்தை பாதி வழியிலேயே உயிரிழந்தது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து, குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு குழந்தையின் உடலை வீட்டுக்கு ஆம்புலன்சில் கொண்டுச் சென்றபோது, சாலை வசதி இல்லாததால் பாதி வழியில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து அவர்களை கீழே இறக்கி விட்டனர்.

இதையடுத்து குழந்தையின் பெற்றோர்கள் குழந்தையின் உடலை சிறிது தூரம் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று, பின்னர் கால்நடையாக சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூக்கி சென்றனர். 

இதுகுறித்து குழந்தையின் உறவினர்கள் போதிய சாலை வசதி இருந்திருந்தால், குழந்தையை காப்பாற்றி இருக்க முடியும் என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parents walk 10 km with child body for ambulance dropped mid way in vellore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->