மாணவர் சேர்க்கை குறைவால் மூடப்பட்ட பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள் - கும்மிடிபூண்டியில் பரபரப்பு.!!
parents protest front of school in kummdipoondi
மாணவர் சேர்க்கை குறைவால் மூடப்பட்ட பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள் - கும்மிடிபூண்டியில் பரபரப்பு.!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தப் பள்ளி பொருளாதார நெருக்கடியாலும், மாணவர்களின் சேர்க்கை குறைவு காரணமாகவும் மூடப்படவுள்ளது.
அதனால், இந்தப் பள்ளியில், படித்து வந்த மாணவ, மாணவிகள் பிற பள்ளிகளுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இந்தப் பள்ளியில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் படித்து வந்த மாணவர்களுக்கு அதே சலுகை, கடைசி நேரத்தில் வேறு தனியார் பள்ளிகளில் கிடைக்குமா? என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று அந்த பள்ளி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டம் தகவலறிந்த கல்வித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
English Summary
parents protest front of school in kummdipoondi