குற்றவாளி சதீஷை இரு முறை தூக்கிலிட வேண்டும் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Parankimalai allikulam case judhement
சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில், காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை, ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளி சதிஷிற்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பரங்கிமலை காவலா் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியா என்ற மாணவி காதலிக்க மறுத்ததால், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்ற இளைஞர், கடந்த 2022-ஆம் ஆண்டு அக். 13-ஆம் தேதி, பரங்கிமலை ரயில் நிலையத்தில், தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன் தள்ளி விட்டு கொலை செய்தார்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சதீஷை கைது செய்து சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் வழக்கின் விசாரணை சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிா் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன் நடைபெற்று வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் சதிஷ் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றம் இன்று குற்றவாளி சதிஷிற்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்தபிறகு அவரை இரு முறை தூக்கிலிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Parankimalai allikulam case judhement