தொடர்ந்து பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் ராகுல் காந்தி: சிஆர்பிஎப் புகார்..!
CRPF complains that Rahul Gandhi is constantly violating security norms
இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் காங்கிரஸ் எம்பியும் லோக்சபா எதர்க்கட்சித் தலைவருமான ராகுல், வெளிநாடு பயணத்தின் போது, விதிமுறைகளை தொடர்ந்து மீறுவதாக சிஆர்பிஎப் புகார் அளித்துள்ளது.
'Advnced Security Liaison ' உடன் கூடிய 'இசட் பிளஸ்' பாதுகாப்பில் உள்ள ராகுல்காந்திக்கு உள்ள அச்சுறுத்தல் காரணமாக இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு 24 மணி நேரமும், சிஆர்பிஎப் கமாண்டோக்கள் 10 பேர் மற்றும் போலீசார் உட்பட 36 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராகுல் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அடிக்கடி வெளிநாடு செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், சமீபத்தில் இத்தாலி, வியட்நாம், துபாய், கத்தார், லண்டன் மற்றும் மொரீஷியசுக்கு பயணம் சென்றுள்ளார். அப்போது அவர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக சிஆர்எப் கூறியுள்ளது.
அதாவது, ' Yellow Book' நெறிமுறைகளின்படி, இசட் பிளஸ் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாதுகாப்பில் இருப்பவர்கள், வெளிநாடு பயணம் மற்றும் வெளியூர் செல்வது குறித்த தகவல்களை முன்கூட்டியே பாதுகாப்பு படையினருக்கு அளிக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்ய முடியும். ஆனால், இந்த விதிமுறைகளை ராகுல் பின்பற்றவில்லை என சிஆர்பிஎப் குற்றம் சுமத்தியுள்ளது.

இதனால், அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் தொய்வு ஏற்படுவதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சிஆர்பிஎப் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் ராகுலுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதனை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டுள்ள நிலையில், இது குறித்து காங்கிரஸ் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு விதிமுறைகளை ராகுல் மீறுவதாக அவர் மீது குற்றச்சாட்டு வருவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் இது போல் குற்றச்சாட்டு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
CRPF complains that Rahul Gandhi is constantly violating security norms