சென்னை பெரம்பலூரில் 'திருக்குறள் திருப்பணிகள் திட்டம்' தொடக்க விழா..! - Seithipunal
Seithipunal


கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது தமிழ் நாடு முழுவதும் ‘திருக்குறள் திருப்பணிகள்‘ திட்டம் செயற்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இந்த அறிவிப்ப்புக்கு இணங்க, சென்னை மாவட்டத்தில் திருக்குறள் திருப்பணி திட்டம் இன்று 11.09.2025 (வியாழக் கிழமை) முற்பகல் 10:00 மணிக்கு பெரம்பூர் சென்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர். ந. அருள் வரவேற்புரை ஆற்றினார்.

இதன் போது வடசென்னை வருவாய் கோட்டாட்சியர் பெருமாள், பெருநகர சென்னை மாநகராட்சி உதவி கல்வி அலுவலர்கள் எஸ். வேதவல்லி, செல்வகுமாரி, தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருதாளர் முனைவர் கு. மோகனராசு, உலக திருக்குறள் சமுதாய மையத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் ம. சக்கரவர்த்தி, திருக்குறள் திருத்தூதர் முனைவர் குமரிச் செழியன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். 

அத்துடன், உலக திருக்குறள் சமுதாய மையத்தின் இணைச் செயலாளர் திருக்குறள் ஞானப்பீட விருதாளர் பேராசிரியர் முனைவர் இரா. ஆரோக்கியமேரி மற்றும் உலகத் திருக்குறள் சமுதாய மையத்தின் திருக்குறள் தூதர் எ. கோட்டீஸ்வரி ஆகியோர் திருக்குறள் திருப்பணி திட்டத்தில் பங்கு கொண்ட நூறு மாணவிகளுக்கு முதல் பயிற்சி வகுப்பு வழங்கினார்கள். அதனையடுத்து, 45 நிமிட திருக்குறள் பயிற்சிக்குப் பிறகு தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் வே. சாந்தி நன்றியுரையாற்றினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Inaugural ceremony of Thirukkural renovation project in Chennai


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->