தகுந்த ஆதாரங்களை வழங்குவேன்.. ராகுல் காந்தி மீண்டும் திட்டவட்டம்!
I will provide the necessary evidence Rahul Gandhi is once again targeted
வாக்குத் திருட்டு நடைபெற்றதற்கான தகுந்த ஆதாரங்களை வழங்க உள்ளோம் என்று மீண்டும் ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்கு திருட்டு நடந்ததாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அவரது இந்த குற்றச்சாட்டை தேர்தல் கமிஷன் நிராகரித்தது. இதையடுத்து ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ என்ற பெயரில், ராகுல்காந்தி யாத்திரை நடத்தினார்.
இந்தநிலையில், ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-வாக்குகளைத் திருடியே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது என்பதற்கான மிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அதிர்ச்சியளிக்கும் தகுந்த ஆதாரங்களை தான் வழங்க உள்ளோம்.
"மராட்டியம், அரியானா மற்றும் கர்நாடகாவில் தேர்தல்களில் வாக்கு திருட்டு நடந்துள்ளது.அதேபோல மத்திய பெங்களூரு உள்ளிட்டப் பகுதிகளில் வாக்குத் திருட்டு நடைபெற்றதற்கான வெள்ளை மற்றும் கருப்பு ஆதாரங்களை நாங்கள் அளித்திருக்கிறோம். வரும் காலங்களில், நாங்கள் இன்னும் துடிப்பான, வெடிக்கும் ஆதாரங்களை வழங்குவோம். வாக்கு சோர், காடி சோட்" என்ற முழக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.
வாக்குத் திருட்டு என்ற புகார், உண்மை என்பதால்தான் காட்டுத் தீ போல பரவி வருகிறது.வாக்குகளைத் திருடித்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்திருக்கிறது என்பது உண்மை. பாஜக தலைவர்கள், இதற்கு எதிரானப் போராட்டத்தை நிறுத்த வேண்டும், ஏனென்றால் ஹைட்ரஜன் குண்டு, அனைத்தையும் தரைமட்டமாக்கிவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
I will provide the necessary evidence Rahul Gandhi is once again targeted