மீண்டும் பன்னாட்டு விமான நிலையம்..முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
International airport again Chief Minister MK Stalins announcement
வளர்ச்சியின் மூலம் உலக அளவில் கவனம் ஈர்க்கும் நகரமாக ஓசூர் இருக்கிறது.ஆகவே ஓசூரில் 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று கிருஷ்ணகிரி சென்றார் . அங்கு ஓசூரில் நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றிய போது அவர் கூறியதாவது: ஒரு காலத்தில் சிறிய தொழில் நகரம் எனக் கூறப்பட்ட ஓசூர் விருப்பமான நகரமாக உருவெடுத்தது.
ஓசூரில் 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.400 கோடியில் ஐடி பார்க் அமைக்கப்பட உள்ளது.ஓசூர் அறிவுசார் முனையத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன.
ஸ்டாலின் என்றால் மேன் ஆஃப் ஸ்டீல் எனப்பொருள் என்பதால் உறுதியுடன் கூறுகிறேன்.தொழிற்சாலைகள் ஓசூரை நோக்கி சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றன. வளர்ச்சியின் மூலம் உலக அளவில் கவனம் ஈர்க்கும் நகரமாக ஓசூர் இருக்கிறது.நமது சாதனைகளை நாம் தான் முறியடித்துக் கொண்டு இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து இன்றும், நாளையும் கிருஷ்ணகிரியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருந்தார் .இந்தநிலையில் சபரீசனின் தந்தை மறைவு காரணமாக மு.க.ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார். இதனால் அவரது பயண திட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
International airport again Chief Minister MK Stalins announcement