ராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்துங்கள்..ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் இந்தியா! - Seithipunal
Seithipunal


இந்தியர்களை ராணுவத்தில் சேர்ப்பதை ரஷியா உடனடியாக நிறுத்த வேண்டும்  என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா இடையே கடந்த  மூன்று ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் முதலில் அதிவேகமாக ரஷியா உக்ரைன் பகுதிக்குள் முன்னேறியது. அதன்பின் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் செய்ததனால் உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தியது.

இதனால் ரஷிய ராணுவம் பின்வாங்க தொடங்கியது. மேலும் ரஷிய ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இழந்தது. இதனால் வெளிநாட்டில் உள்ள இளைஞர்களை அதிக சம்பளம் தருவதாக ஆசைவார்த்தை கூறி அவர்களை ராணுவத்தில் இணைத்தது.

அப்படி இந்தியாவைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவரை ரஷிய ராணுவத்தில் சேர்த்து உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ஈடுபடுத்தியது . அப்போது உக்ரைனுக்கு எதிரான சண்டையில் இந்தியாவைச் சேர்ந்த சிலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ரஷிய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை உடனடியாக நிறுத்துமாறு ரஷியாவை இந்தியா வலியுறுத்தியுள்ளது.மேலும், ரஷிய ராணுவத்தில் போர் அல்லாத பணிகளில் பணியாற்றும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்கவேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stop joining the army India is putting pressure on Russia


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->