ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்வில் தேர்ச்சி கட்டாயம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல்: தமிழக அரசு முடிவு..!
Tamil Nadu government files review petition against Supreme Court verdict making TET mandatory for teachers
55 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆசிரியர்களும் ' டெட் ' தேர்வில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில், 1.75 லட்சம் பேருக்கு மேலானவர்கள், 'டெட்' ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், 55 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆசிரியர்களும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவதை, உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியுள்ளது.

இதற்கு தமிழகஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டி.ஆர்.பி., மற்றும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், மீண்டும் எதற்காக ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டும் என்றும், தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது: தீர்ப்புக்கு எதிராக அச்சமடைய வேண்டாம் என அரசு சார்பில் தெரிவித்ததாகவும், தீர்ப்பு வந்ததும் வெளிநாட்டில் இருந்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார் என்றும், வார்த்தையாக மட்டும் அல்லாமல் சட்ட ரீதியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதோடு, உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சட்ட ரீதியாக போராடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Tamil Nadu government files review petition against Supreme Court verdict making TET mandatory for teachers