சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு நேரத்தை கொடுமை: மயக்க ஊசி போட்டு பலாத்காரம்: போதையில் லேப் டெக்னீசியன் செய்த கேவலம்..! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலம் ஜகத்தியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளம்பெண் ஒருவர் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை அவரது பெற்றோர் கடந்த 06-ஆம் தேதி கரீம்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

குறித்த இளம்பெண் அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு நேற்று அம்மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் வந்துள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஊசி போட வேண்டும். அனைவரும் வெளியே காத்திருங்கள் எனக்கூறியுள்ளார். அதன்படி பெண்ணின் பெற்றோர் அறைக்கு வெளியே சென்று காத்திருந்துள்ளனர். 

அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை அந்த ஊழியர் துணியால் மறைத்துவிட்டு,  குடித்த இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டுள்ளார். அப்போது மயங்கிய அப்பெண்ணை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மருத்துவமனை ஊழியர் அறையில் இருந்து வெளியே சென்றவுடன் இளம்பெண்ணின் பெற்றோர் உள்ளே சென்றுள்ளனர்.

அப்போது தங்களது மகள் மயங்கிய நிலையில் அலங்கோலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் தற்போது வந்து சென்றவர் யார் என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் குறித்த மருத்துவமனையில் பரபரப்பு நிலவிய நிலையில், பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர் அந்த மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரியும் மகாராஷ்டிராவை சேர்ந்த 23 வயதுடைய தட்சிணாமூர்த்தி என்ற நபர் என தெரியவந்துள்ளது. அத்துடன் அவர் பனி நேரத்தில் மதுபோதையில் இருந்ததோடு, இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தட்சிணாமூர்த்தியை கைது செய்துள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த செல்போனை சோதனை செய்தபோது அதில் ஆபாச படங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lab technician arrested for raping young woman in Telangana after administering anesthetic


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->