மலை, கடல், ஆறுகளுக்கும் மாநாடு.. சீமான் அதிரடி! - Seithipunal
Seithipunal


ஆடு, மாடு மாநாடுகளை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெற உள்ளது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

 சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  கூறியதாவது:

சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு பற்றி சொல்ல எதுவும் இல்லை. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கோட்பாடு என்னவோ அப்படித்தான் பா.ஜ.க. இயங்கும். ஆர்.எஸ்.எஸ்.ல் பயிற்சி எடுத்தவர்கள் அந்த சித்தாந்தப்படி தான் இயங்குவார்கள்.

பா.ஜ.க.வின் கொள்கைகளுடன் ஒத்துபோய் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது தி.மு.க. தான். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்தது முதல்வர்தான். அதற்கு பிரதிநிதியாக போய் உலக நாடுகளில் பேசியது கனிமொழிதான். குஜராத் கலவரத்தை ஆதரித்து பேசியவர்கள். மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்த்து பேசுகிறார்கள். இவர்களிடம் உறுதித்தன்மை என்ன இருக்கிறது.

 சனிக்கிழமைகளை மட்டும் தேர்ந்தெடுத்து விஜய் பிரசாரம் மேற்கொள்வது குறித்து?அது அவர் கட்சியின் முடிவு. அதில் கருத்து சொல்ல முடியாது என கூறினார் .மேலும் திருச்சியில் பள்ளிக்கு விடுமுறை கொடுத்து உங்கள் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது குறித்து பேசிய சீமான் படிக்கும் பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டு இந்த கூட்டம் நடத்தும் அளவிற்கு அந்த திட்டம் என்ன செய்து விட்டது. இதுபோன்ற கொடுமைகள் எல்லாம் செய்வதற்கு பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி. எங்கள் ஊரில் இதேபோல் இத்திட்டத்தில் மனுக்களை பெற்று அதை ஆற்றில் வீசினார்கள்.

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பிரிந்தவர்கள் விஜயுடன் கூட்டணி சேர்ந்தால் என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான்  கூட்டத்தை வைத்து கட்சியை ஆரம்பிக்கவில்லை. நான் நம்புவது உயர்ந்த கொள்கையை தான்.

ஆண்ட அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரசுடன் கூட்டணி வைத்து என்ன செய்யப் போகிறீர்கள். அவர்கள் 60 சதவீதம் கொள்ளை அடித்தால் இவர்கள் 40 சதவீதம் கொள்ளை அடிப்பார்கள் இதுதான் நடக்கப்போகிறது.

 ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பேசிய அவர் , 17 ஆண்டுகளுக்கு முன்பாகவே குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அப்போது நமக்கு தெரியவில்லை. அதைப் போராடி தான் தடுப்போம், தரையில் எடுத்து முடித்துவிட்டு தற்போது கடலுக்குள் செல்கிறார்கள்.

இன்று நான் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் மக்கள்தான் ஒரு காலத்தில் நான் தங்குவதற்கு விடுதி கொடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். அதிகாரங்களை எதிர்த்து போரிட்டு சண்டை போட்டதால் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது, இதற்கெல்லாம் பயப்படக்கூடாது.

ஆடு, மாடு மாநாடுகளை தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெற உள்ளது. நாங்கள் மனிதர்களுக்கு மட்டுமான அரசியலாக இல்லாமல், எல்லா உயிர்களுக்குமான அரசியலாக பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Conference on mountains seas and rivers Seemans shocking


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->