தலைக்கேறிய போதை: தன்னை கடித்த நல்ல பாம்புடன் நடமாடியவருக்கு நேர்ந்த கதி..!
A man who was intoxicated and walked with a snake that bit him is in critical condition in hospital
மது போதையில் நபர் ஒருவர் நல்லபாம்பு பிடிக்க முன்றபோது, பாம்பு அது அவரது கையை கடித்துள்ளது. ஆனாலும் போதையில் இருந்ததால் அந்த நபர் கடித்த பாம்பை தோளில் போட்டு கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் அமைந்துள்ளது, இங்குள்ள தரியலதிப்பா கிராமத்தை சேர்ந்தவர் கொள்ளப்பள்ளி கொண்டா என்ற 50 வயதுடையாய் நபர், மது போதையில் அவரது வீட்டருகே ஊர்ந்து வந்த நல்ல பாம்பை பிடிக்க முயன்றுள்ளார்.

அப்போது அந்த பாம்பு அவரது கையை கடித்துள்ளது. போதையில் தள்ளாடிய அவர் பாம்பை பார்த்து, என்னையா கடிக்கிறாய்..? எனக்கூறி பாம்பை பிடித்து, அதன் கழுத்தை நெறித்தபடி தனது கழுத்தில் மாலையாக சுற்றிக்கொண்டு உலாவியுள்ளார்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் அலறியுள்ளனர். ஆனாலும் அந்த நபர் பாம்பை பொதுமக்கள் மீது தூக்கி வீசுவது போல, அச்சுறுத்தும் வகையில் அங்கும், இங்கும் நடமாடியுள்ளார். சிறிது நேரத்தில், பாம்பின் விஷம் தலைக்கேறியதில் வாயில் நுரைதள்ளியபடி பாம்பை கீழே வீசிவிட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அப்பகுதி மக்கள், அவரை மீட்டு காக்கிநாடா அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். தற்போது ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
English Summary
A man who was intoxicated and walked with a snake that bit him is in critical condition in hospital