மாநில அளவிலான கைத்தறி நெசவு போட்டி... பரிசுகளை அள்ளிய பரமக்குடி நெசவாளர்களின் சாதனை.! ! - Seithipunal
Seithipunal


பரமக்குடியைச் சார்ந்த நெசவாளர்கள்  மாநில அளவில் நடைபெற்ற போட்டியில்  முதல் இரண்டு பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர்.

பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் பகுதியில் எண்பதுக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவு சங்கங்களில் ஐயாயிரத்திற்கும் அதிகமானோர் நெசவு தொழில் செய்து வருகின்றனர்.

கைத்தறி கூட்டுறவு சங்கம் சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான மாநில அளவில் பருத்தி நெசவுத் தொழிலில் சிறந்த நெசவாளர்களுக்கான போட்டியை நடத்தியது. இந்தப் போட்டியில் பரமக்குடியைச் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாநிலத்திலிருந்து பல்வேறு நெசவாளர்களும் கலந்து கொண்ட இந்த போட்டியில் பரமக்குடியைச் சார்ந்த சரவணன் என்பவர் முதல் பரிசையும் பரமக்குடியைச் சார்ந்த நாகராஜன் என்பவர் இரண்டாம் பரிசையும் வென்றனர். இதில் முதல் பரிசை வென்ற சரவணன் ராமாயணத்தில் ராமன் பத்து தலை ராவணனை வதம் செய்யும் காட்சியை தத்ரூபமாக பல வண்ணங்களில் நெசவு மூலம் வடிவ வைத்திருக்கிறார். இரண்டாம் பரிசை வென்ற நாகராஜன் இயற்கை காட்சிகளை நெசவு செய்துள்ளார். இவர்களுக்கு முறையே முதல் பரிசாக 5 லட்ச ரூபாயும்  இரண்டாவது பரிசாக மூன்று லட்ச ரூபாயும் கைத்தறி சங்கம் சார்பாக வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paramakudi weavers who won the first and second prizes in the state level handloom weaving competition


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->