திருச்சியில் பயங்கரம்: சோசியல் மீடியா மூலம் வலைவீசி சிறுமி பலாத்காரம்...! சிக்கிய 9 பேர் கொண்ட கும்பல்! - காவலர்கள் அதிரடி வேட்டை
Panic Trichy Girl harassment social media gang 9 trapped Guards Action Hunt
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாலக்கரை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிறுமி கண்டுபிடிக்கப்பட்டு அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இருப்பினும், அவருடன் செல்ல சிறுமி விருப்பம் தெரிவிக்காததால், குழந்தைகள் பாதுகாப்பு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.அங்கு அதிகாரிகளிடம் பேசிய சிறுமி, தனக்கு சிலரால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் ஏற்பட்டதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து குழந்தைகள் நலக்குழுவினர் சம்பவம் குறித்து கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முறையிட்டனர்.
புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய காவலர்கள், சிறுமியிடம் விரிவாக தகவல்களை சேகரித்தனர். அப்போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் 7 சிறுவர்கள் உட்பட 9 பேர் சிறுமியுடன் தொடர்பில் இருந்ததாகவும், வெவ்வேறு காலகட்டங்களில் அவரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சிலர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து மகளிர் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு, 7 சிறுவர்கள் உட்பட 9 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் உறுதியானதைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அனைவரையும் கைது செய்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பெரும் அதிர்வலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Panic Trichy Girl harassment social media gang 9 trapped Guards Action Hunt