#திருப்பூர் || கோவில்களை இடிக்க தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


உடுமலைப்பேட்டையில் நூற்றாண்டுகள் பழமையான இரண்டு இந்து கோவில்களை இடிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்த பள்ள பாளையத்தில் உள்ள கருப்பராயன் சுவாமி கோவிலிலும், வடுக பாளையத்தில் உள்ள கருவந்தராய சுவாமி கோவிலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக கோரி, மாவட்ட நிர்வாகம் இடிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. இதற்கு இரு கிராமத்தை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். 

இந்த நிலையில், அந்த கிராமங்களை சேர்ந்த கோபிநாதன், கிருஷ்ணசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு ஒன்றை தொடங்கினார். இந்த இரண்டு வழக்குகளையும் விசாரணை செய்த நீதிபதிகள் முன்பு மனுதாரர் தரப்பில்,

"100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவில் வருவாய் துறை ஆவணங்களில் இடம்பெறுவதில்லை. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால், இந்த கோவில்களை இடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று வாதிடபட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், 100 ஆண்டுகள் பழமையான கோயில்களை இடிப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுதாரரின் மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pallapalaiyam vadukapalaiyam temple issue


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->