7 நாட்கள்-3 நாட்கள்- 1 நாள் -இப்போது 1 மணி நேரம்!-ரிசர்வ் வங்கி அறிவிப்பு
7 days 3 days 1 day 1 hour now Reserve Bank announcement
இனி காசோலை செலுத்தினால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
அவ்வகையில், வங்கிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செலுத்தப்படும் காசோலைகள் உடனுக்குடன் ஸ்கேன் செய்து பரிசீலிக்கப்படும். ஒரு மணி நேரத்திற்குள் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் சேர்க்கப்படும்.

மேலும், காலை 11 மணி முதல் வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் ஒவ்வொரு மணி நேரத்திலும் நடைபெறும். இதில் டெபாசிட் செய்யப்பட்ட காசோலைகளை மாலை 7 மணிக்குள் வங்கிகள் பரிசீலிக்க வேண்டும், தவறினால் அந்த காசோலை தானாகவே அங்கீகரிக்கப்பட்டு பணம் பயனாளிக்கு வழங்கப்படும்.
கடந்த 1980-களில் காசோலை பரிசீலிக்க ஒரு வார காலம் எடுத்துக்கொண்ட நிலையில், பின்னர் அது 3 நாட்களாக, அதன் பின் 2008-இல் 1 நாளாக குறைக்கப்பட்டது. இப்போது, அது ஒரு மணி நேரத்தில் முடிவடைகிறது.இந்த சீர்திருத்தம் நாடு முழுவதுமு ள்ள அனைத்து வங்கிகளிலும் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.
மேலும், பயனாளிகளின் வசதிக்காக பணம் உடனுக்குடன் கிடைக்கப்பெறுவதோடு, நாட்டின் பொருளாதாரத்திற்கும் அதிவேக வளர்ச்சியை உறுதி செய்யும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
English Summary
7 days 3 days 1 day 1 hour now Reserve Bank announcement