அடடே! 20,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி! கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட முதலமைச்சர்
Welfare assistance for 20000 beneficiaries Chief Minister visits Keezhadi Museum
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சென்றார். நேற்று இரவு அவர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி, இன்று காலை பேராவூர் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சியில், சுமார் 20,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் உள்பட ரூ.738 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை முதலமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த விழாவை முன்னிட்டு புல்லங்குடி பகுதியில் சிறப்பான மேடை, பந்தல் அமைக்கப்பட்டு, ராமநாதபுரம் மாவட்ட எல்லையிலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை திமுகக் கொடிகள் அலங்கரித்தன. அங்கு சுமார் 1500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முருகேசன் எம்.எல்.ஏ., கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட காவல் சூப்பிரண்டு சந்தீஷ் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர் பண்பாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு, அங்கு சுமார் 13,000 தொல்பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
English Summary
Welfare assistance for 20000 beneficiaries Chief Minister visits Keezhadi Museum