இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகை... கடந்த 10 வருடங்களாக முதலிடத்தில் இருக்கும் நடிகை! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமா நட்சத்திரங்களின் பிரபலத்தை அளவிடும் போது, திரைப்பட வசூலைத் தாண்டி, சமூக வலைதளங்களில் அவர்களை எவ்வளவு பேர் தேடுகிறார்கள் என்பதும் முக்கியமான அளவுகோலாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த பத்து ஆண்டுகளில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர்-நடிகைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே முதலிடத்தை பிடித்து, ஷாருக்கான், சல்மான்கான், பிரபாஸ், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

பட்டியலில் ஷாருக்கான் இரண்டாம் இடத்திலும், தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், இர்பான் கான், அமீர்கான், சுஷாந்த் சிங் ராஜ்புத், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய் குமார் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகைகளில் சமந்தா 13-வது இடம், தமன்னா 16-வது இடம், நயன்தாரா 18-வது இடம் ஆகியவற்றைப் பிடித்துள்ளனர். தமிழ் நடிகர்களில் பிரபாஸ் 29-ம் இடத்திலும், தனுஷ் 30-ம் இடத்திலும் இடம்பெற்றுள்ளனர். மற்ற தமிழ் நட்சத்திரங்கள் இந்த பட்டியலில் இடம்பெறாதது கவனிக்கத்தக்கதாகும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Actress viral web search


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->