சாம்ஸ் பெயர் செட்டாகல.இனி ‘ஜாவா சுந்தரேசன்’ விஜயதசமி அதுவுமா பெயரை மாத்திட்டாரே!
Sams name is Settagala Now Java Sundaresan is Vijayadasami so he changed his name
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நகைச்சுவை நடிகர் சாம்ஸ் ஒரு பரிச்சயமான முகம். தனித்துவமான நகைச்சுவை பாணியால் பல திரைப்படங்களில் ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக அவர் நடித்த ‘ஜாவா சுந்தரேசன்’ கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் இன்னும் பதிந்து கிடக்கிறது.
இந்நிலையில், விஜயதசமி நாளான அக்டோபர் 2ஆம் தேதி, தனது பெயரை மாற்றிக் கொண்டதாக அவர் அறிவித்துள்ளார். இதற்கான காரணத்தையும் வீடியோவில் பகிர்ந்து, ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.
சாம்ஸ் தனது வீடியோவில் கூறியதாவது:“என் இயற்பெயர் சாமிநாதன். அந்த பெயரில்தான் நான் சினிமாவுக்குள் நுழைந்தேன். தனித்துப் தெரிய வேண்டும் என்பதற்காக சாம்ஸ் என்று மாற்றினேன். அந்த பெயரில் நான் 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன்.
ஆனால் இயக்குநர் சிம்புதேவன் இயக்கிய அறை எண் 305இல் கடவுள் படத்தில் நான் நடித்த ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் எனக்கு தனிப்பட்ட அடையாளத்தைத் தந்தது. அதன்பின் பலரும் என்னை சாம்ஸ் என்று அல்ல, ஜாவா சுந்தரேசன் என்று அழைக்கத் தொடங்கினர்.
அதனால் நீண்ட யோசனைக்குப் பிறகு, அந்த கதாபாத்திரத்தை உருவாக்கிய சிம்புதேவன் சார் அவர்களிடம் சந்தித்து அனுமதி, ஆசீர்வாதம் பெற்று, இன்று முதல் என் பெயரை ஜாவா சுந்தரேசன் என மாற்றிக் கொண்டேன்.”
மேலும் அவர்,“இந்த அருமையான கதாபாத்திரத்தையும் பெயரையும் கொடுத்த சிம்புதேவன் சார் மற்றும் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் சார் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். மக்களை மகிழ்விக்கும் வாய்ப்பை வழங்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் என் நன்றிகள்.ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல மீம்ஸ்களை உருவாக்கி மகிழ்ச்சி தந்த மீம் கிரியேட்டர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி,” என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சாம்ஸ் தனது புதிய பெயராக ‘ஜாவா சுந்தரேசன்’ என அறிவித்துள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பெருமளவில் வாழ்த்துகள் தெரிவித்து, அவரின் புதிய பயணம் வெற்றியடைய வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Sams name is Settagala Now Java Sundaresan is Vijayadasami so he changed his name