அஜித்குமாருக்கு ஸ்லீப்பிங் டிசாடர் நோய்! கார் ரேஸால் வந்து ஒட்டிக் கொண்ட சிக்கல்! அஜித் அவதி!
Ajith Kumar has a sleeping disorder The problem came from a car race Ajith is suffering
தமிழ் திரையுலகில் அஜித் குமார் பற்றி தனி அறிமுகம் தேவையில்லை. தென்னிந்தியாவிலிருந்து வடஇந்தியாவரையிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். திரைப்படங்களில் அதிரடி சண்டைக் காட்சிகள், பந்தயங்களில் தன் சாதனைகள் என எப்போதும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில், அஜித் தற்போது தூக்கமின்மை (Sleeping Disorder) பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார் என்ற தகவல், ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
வயது எவ்வளவு உயர்ந்தாலும், இன்னும் “காதல் மன்னன் அஜித் தான்” என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். சினிமாவோடு மட்டும் இல்லாமல் மோட்டார் ஸ்போர்ட்ஸ், கார் மற்றும் பைக் பந்தயங்கள் மீதான அவரின் ஆர்வம் அனைவருக்கும் தெரிந்ததே. பலமுறை பந்தயங்களில் விபத்துகளை சந்தித்தும், ஒருபோதும் பின் வாங்காதவர் அஜித். தற்போது கூட சர்வதேச அளவிலான ரேஸ்களில் பங்கேற்று வருகிறார்.
அண்மையில் இந்தியா டுடே-க்கு அளித்த பேட்டியில், அஜித் தனது உடல்நலப் பிரச்சனை குறித்து திறம்படப் பேசியுள்ளார்.“நான் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறேன். அதிகபட்சம் 4 மணி நேரம் மட்டுமே தூங்க முடிகிறது. என்னை தூங்க வைப்பது மிகவும் கடினம். திரைப்படங்களும், கதைகளும் எனக்கு பிடிக்கும். ஆனால் என் வாழ்க்கை முறை காரணமாக பார்க்க முடியவில்லை. விமானப் பயணங்களின் போது மட்டுமே ஓய்வெடுக்கிறேன்,” என அஜித் கூறினார்.
இந்த பிரச்சனை அவரது உடல்நலத்தையும் அன்றாட வாழ்க்கையையும் கடுமையாக பாதிக்கிறது, அதனால் பல வேலைகளை விட ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்கள் குறித்து பேசும்போது,“சரியான நபர்களின் கைகளில் இருந்தால் சமூக ஊடகங்கள் ஒரு சிறந்த கருவி. இந்திய ரசிகர்கள் மோட்டார் ஸ்போர்ட்ஸைப் பற்றி அதிகமாக அறிய வேண்டும். நமது திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும் உலகளாவிய அளவில் சென்றடைய வேண்டும். கொரிய கதைகள் உலகத்தை ஈர்த்ததுபோல, அதே பாதையில் நாம் செல்வது முக்கியம்,” என அவர் தெரிவித்தார்.
மோட்டார் ஸ்போர்ட்ஸ் விபத்துகள் குறித்து,“விபத்துகள் இந்த விளையாட்டின் இயல்பான அங்கம். அவை ஆபத்தானவை தான், ஆனால் ரேஸர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உயிரிழப்புகள் அரிதாகவே நடக்கின்றன. விதிமுறைகளை மீறினால்தான் பெரும் விபத்துகள் ஏற்படும்,” என அஜித் தெரிவித்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் அஜித் குமார், தனது தூக்கமின்மை மற்றும் உடல்நலப் பிரச்சனைகளை வெளிப்படையாகப் பகிர்ந்தது, ரசிகர்களுக்கு திரைக்குப் பின்னால் உள்ள சிரமங்களையும் உண்மையான வாழ்க்கையையும் புரிந்துகொள்ள வைத்ததோடு, அவர்களை பெரும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Ajith Kumar has a sleeping disorder The problem came from a car race Ajith is suffering