மினிமம் பேலன்ஸ்: தள்ளிப்படி செய்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி!
IOB Minimum balance
இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி), சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காததற்காக வசூலிக்கப்பட்ட கட்டணங்களை தள்ளுபடி செய்துள்ளது.
வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத் திட்ட சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச சராசரி இருப்பு இல்லாததற்காக விதிக்கப்படும் அபராத கட்டணங்கள் இனி வசூலிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது.
இந்த முடிவு, சாதாரண வாடிக்கையாளர்கள் மற்றும் குறைந்த வருவாய் கொண்டவர்களுக்கு வங்கி சேவைகளை இன்னும் எளிதாகப் பயன்படுத்த உதவும் எனவும் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா (PMJDY), அடிப்படை சேமிப்பு வைப்புக் கணக்கு (BSBDA), சிறிய கணக்குகள், ஐஓபி சேமிப்பு கணக்கு, ஊதிய தொகுப்பு, ஐஓபி 60 பிளஸ், ஓய்வூதிய சேமிப்பு கணக்கு மற்றும் ஐஓபி அரசு கணக்கு ஆகியவற்றில் குறைந்தபட்ச இருப்பு இல்லாததற்கான கட்டணங்கள் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதாகவும் வங்கி விளக்கியுள்ளது.