யூடியூபர்கள் உடன் தகராறு: கோகுல் என்பவர் கைது!
Karur Stampede DMK TVK Gokul
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசியதாக, யூடியூபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோகுல் என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
சென்னையின் ரோகிணி திரையரங்கில் இட்லி கடை திரைப்படம் வெளியானபின், ரசிகர்களின் கருத்துக்களை பதிவு செய்ய யூடியூபர்கள் அங்கு வந்திருந்தனர்.
அப்போது, கரூர் சம்பவம் மற்றும் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்கள் பதிவாகிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த கோகுல், தன்னை தவெக உறுப்பினர் என்று கூறி, யூடியூபர்களிடம் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர், “திமுகவின் கைக்கூலிகளாக 200 ரூபாய் வாங்கி வாழ்க்கை நடத்துகிறீர்கள், விஜய் மீது அவதூறு பேசாதீர்கள்” என்று சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இரண்டு தரப்பினருக்கும் கடும் தகராறு ஏற்பட்டது. மேலும், “என்னை கைது செய்ய முடிந்தால் செய்து பாருங்கள், என் பின்னால் கட்சி வந்து நிற்கும்” என்றும் கோகுல் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், போலீசார் கோகுலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Karur Stampede DMK TVK Gokul