அதிகாலையில் பரபரப்பு.. நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!
bomb thread to actor trisha house
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், அரசியல்வாதிகளின் வீடுகள், திரை பிரபலங்களின் வீடுகள் போன்றவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர் கதையாகி வருகிறது. தீவிர சோதனைக்கு பிறகு அது புரளி என்பதும் தெரிய வருகிறது.
இந்த நிலையில், சென்னை தேனாம் பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது. அதேபோல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடு மற்றும் ஆளுநர் மாளிகைக்கும் வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நடந்த சோதனையில் வெடி குண்டு மிரட்டல் போலி என்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு முன்னதாக நடிகரும் தவெக தலைவருமான விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
bomb thread to actor trisha house