தி.மு.க, அ.தி.மு.கவை அகற்ற, அவர் ஒருவரால் மட்டுமே முடியும்.. பழ. கருப்பையா பரபரப்பு பேச்சு.!
Pala Karuppiah speech about Rajinikanth like MGR in Politics
தமிழக சட்டப்பேரவை தேர்தலானது வரும் 2021 ஆம் வருடத்தில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறியவாறே, கட்சியை துவங்கி தேர்தலை சந்திப்பாரா என்பது தொடர்பான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், ரஜினியின் அரசியல் வருகை தொடர்பாக பழ. கருப்பையா பேசியுள்ளார். தனியார் தொலைக்காட்சியில் வழங்கிய பேட்டியில், " கடந்த 1996 ஆம் வருடத்தில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற காரணத்தால் ஜெயலலிதாவை தோற்கடித்தனர். ஆனால், மீண்டும் அவரையே முதல்வராக தேர்ந்தெடுத்தனர்.

இதனைப்போன்று கருணாநிதியை தோற்கடித்த மக்கள், மீண்டும் அவரையே முதல்வராக தேர்வு செய்தனர். திமுக, அதிமுகவை விட பிற பெரிய கட்சிகள் இல்லை என்பதற்கு இதுவே தகுந்த சான்றாகும். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பல கட்சிகள் உருவானாலும், அவர்களின் முயற்சி கைகூடவில்லை. வலிமை மிகுந்த கட்சியால் மட்டுமே திமுக, அதிமுகவை அகற்ற இயலும்.

அதிமுகவின் துவக்கத்தில் பல இக்கட்டான சூழ்நிலைக்கு பின்னரே எம்.ஜி.ஆர் வலிமையான கட்சியை ஏற்படுத்தினார். எம்.ஜி.ஆரின் வலிமை ரஜினிக்கும் உள்ளது. அவர் ஒரு வார்த்தை சொன்னால், கடைக்கோடியில் இருக்கும் தமிழருக்கும் அது சென்று சேரும். காங்கிரசை எப்படி எம்.ஜி.ஆர் அகற்றினாரோ, அதனைப்போன்றே ரஜினி திமுக மற்றும் அதிமுகவை அகற்றுவார் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Pala Karuppiah speech about Rajinikanth like MGR in Politics