கல்லூரி மாணவர்களிடையே ஜாதி குறித்து பேசிய பேராசிரியை பணியிடை நீக்கம்.! - Seithipunal
Seithipunal


சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்களிடையே தொடர்ந்து ஜாதி ரீதியில் பேசி வந்த பேராசிரியை அனுராதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த தமிழ் துறை தலைவர் பேராசிரியர் அனுராதா என்பவர் தன்னிடம் படிக்கும் மாணவனிடம் செல்போனில் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த ஆடியோவில் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் குறித்தும், அந்த மாணவர்களுடைய சாதி என்ன என்று குறித்தும் கேட்கிறார். மேலும் சில மாணவர்களுடைய பெயரை சொல்லி அந்த மாணவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவனா.? நீ எந்த சமூகத்தை சேர்ந்தவன் உன்னுடைய முகத்தை பார்த்தாலே தெரிகிறது எந்த சாதினு என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

மாணவர்களின் முகத்தைப் பார்த்தாலே பி.சி-யா.? எம்.பி.சி-யா.? என தெரிந்துவிடும் என்று கூறியுள்ளார். கல்லூரி பேராசிரியர் ஒருவர் இப்படி பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், பச்சையப்பன் கல்லூரி ஆசிரியர் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் அனுராதா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மாணவர்களிடையே தொடர்ந்து ஜாதி ரீதியில் பேசி வந்த பேராசிரியை அனுராதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pachayapas College professor suspended for speech about caste


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->