சென்னை மட்டுமல்லாது தமிழகத்தில் பரவும் மர்ம காய்ச்சல்.. எச்சரிக்கை விடும் மருத்துவர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் எலி காய்ச்சல்., பறவை காய்ச்சல்., சிக்கன் குனியா போன்ற பல நோய்கள் அடுத்தடுத்து வந்து மக்களை மிரட்டிக்கொண்டு வரும் நிலையில்., டெங்கு காய்ச்சல் பாதிப்பானது தற்போது மிரட்டி வருகிறது. டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்காத வண்ணம் மேற்கொள்ளவேண்டிய அனைத்து நடவடிக்கையும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்., கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் மனநல மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் 4 பேருக்கு புதிய வகை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்., பாதிக்கப்பட்ட அனைவரும் அங்குள்ள இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில்., "ஸ்கிரப்டைபஸ்" என்ற நோய்வகை காய்ச்சலானது தமிழகம் முழுவதும் பரவியுள்ளதாகவும்., கடந்த ஜனவரி மாதத்தின் போது சுமார் 1400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்., இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக காய்ச்சல் ஏற்படலாம் என்றும்., உடலில் வலி மற்றும் தீராத தலைவலி., உடலில் கொப்புளங்கள் போன்றவை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai, kilpauk,

மனநல மருத்துவமனையில் காய்ச்சல் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில்., தற்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் புதர் பகுதியில் இருக்கும் தெள்ளு பூச்சி என்று அழைக்கப்படும் பூச்சிகளால் பரவுகிறது என்றும்., முதலில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் எவ்விதமான பிரச்சனை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும்., சிகிச்சை எடுக்காத பட்சத்தில் உடலில் கொப்புளங்கள் தோன்றி அபாயகரமான கட்டத்திற்கு கொண்டு செல்லலாம் என்றும்., இக்காய்ச்சல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ளதாகவும்., இதனால் ஏற்படும் காய்ச்சலை எளிதில் குணப்படுத்தி விடலாம் என்றும்., மக்கள் தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் மருத்துவமனையில் வந்து சோதனை செய்துகொள்ளுமாறும்., துவக்கத்திலேயே சிகிச்சை அளித்துவிட்டால் எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்றும்., பிரச்சனையை கவனிக்காமல் விட்டால் நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 45 பேர் பாதிக்கப்ட்டுள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

over all tamilnadu fever spread doctors caution


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->