வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மீது நாளை முதல் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்!! - Seithipunal
Seithipunal


வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மீது நாளை முதல் நடவடிக்கை எடுக்கப்படும். கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து, போக்குவரத்துத் துறை ஆணையர் முடிவு செய்வார் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

இயற்கை எரிவாயுளில் இயங்கும் 6 அரசு பேருந்துகளை சென்னையில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், வரும் நாட்களில் அனைத்து பேருந்துகளும் டீசலுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படும். செலவுகளை குறைக்கும் வகையில் 16 சி என் ஜி 4 எல் எம் ஜி பேருந்துகளும் சோதனை முறையில் விரைவில் இயக்கப்படும்.


வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மீது நாளை முதல் நடவடிக்கை எடுக்கப்படும். கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து, போக்குவரத்துத் துறை ஆணையர் முடிவு செய்வார். ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன், போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்

மத்திய அரசின் அறிவிப்பின்படி 15 ஆண்டுகள் கடந்த பேருந்துகள் காலாவதியான பேருந்துகளாக கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கால அவகாசம் கோரி இருக்கும் நிலையில் போக்குவரத்து துறை ஆணையர் அதனை பரிசீலனை செய்வார் என்று இவ்வாறு கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

other state registration number omni bus action Minister Sivashankar


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->