ஊட்டி மலை ரெயில் சேவை தொடக்கம்: உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்!
Ooty mountain train running after 11 days
கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் பாதையில் மண் சரிவு மற்றும் மரங்கள் சாய்ந்து தண்டவாளத்தின் குறுக்கே விழுந்தன.
இதனால் மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே மலை ரயில் சேவை கடந்த 4 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி மற்றும் 9ம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து மலையில் பாதையில் 20க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான ரயில் தண்டவாளம் முழுமையாக சீரமைக்கப்பட்டு இன்று முதல் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து மாலை ரயில் சேவை தொடங்கியபோது 100 க்குமேற்பட்ட சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் மலை ரயில் பயணித்தனர்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மலை ரயில் சேவை 11 நாட்களுக்கு மீண்டும் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
Ooty mountain train running after 11 days