விவேகானந்தர் பாறைக்கு செல்ல ஆன்லைனில் டிக்கெட் பெறும் வசதி.!!
online ticket booking for going to vivekandar rock
பிரபல சுற்றுலா தளங்களுள் ஒன்றாக கன்னியாகுமரி விளங்குகிறது. இந்த மாவட்டத்திற்கு சூரிய உதயம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை பார்ப்பதற்கு தினமும் ஏராளமான வெளி நாடு, மாநிலம், மாவட்டம் என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இதில், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. இந்தப் படகு போக்குவரத்தில் செல்வதற்கு டிக்கெட் எடுத்தும் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல இன்று முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரைக்கும் கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்டுகளை பெறும் வசதி இருந்த நிலையில், https://www.psckfs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
English Summary
online ticket booking for going to vivekandar rock