ஜூலை 9 ஆம் தேதி பந்த் போராட்டம்..தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


ஜூலை 9 ஆம் தேதி புதுச்சேரியில் வேலை நிறுத்தம்(பந்த்) சம்பந்தமாக, அனைத்து தொழிற்சங்க தலைவர்கள், பத்திரிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

முதலியார் பேட்டை  ஏ ஐ டி யூ சி அலுவலகத்தில் AITUC மாநில பொதுச் செயலாளர் K.சேதுசெல்வம் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு, நிகழ்ச்சியில்.  CITU மாநில செயலாளர் G.சீனுவாசன்,  INTUC மாநில பொதுச் செயலாளர் P.ஞானசேகரன்,  LPF மாநில அமைப்பாளர் S.அண்ணா அடைக்கலம்,   AICCTU மாநில பொதுச் செயலாளர் S. புருஷோத்தமன், LLF   செயலாளர் ம.செந்தில், MLF மாநில  பொறுப்பாளர் மாசிலாமணி, NDLF   மாநில தலைவர் K.மகேந்திரன் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்

அப்போது பேசிய AITUC மாநில பொதுச் செயலாளர் K.சேதுசெல்வம் கூறியதாவது: இந்திய நாட்டிலுள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரி கூட்டமைப்புகள் (18.03.2025) அன்று இந்திய தலைநகர் டெல்லியில் கூடி தொழிலாளர்களின் தேசிய பேரவை கூட்டத்தை கூட்டின. (National Convention of Workers).இந்த பேரவை கூட்டம் இந்திய உழைக்கும் மக்கள் சந்திக்கக்கூடிய பற்றி எரியும் பிரச்சனைகள் குறித்து விவாதித்துள்ளது.அப்போது, தொழிலாளர்கள் சார்பாக தனித்தும் கூட்டாகவும் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்துள்ளதோடு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், சட்டத்திருத்தங்கள் மேற்கொள்வது பற்றி தேசிய பேரவை விவாதித்து  நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதென ஏகமனதாக முடிவு செய்துள்ளது.
இப்போராட்டத்தை புதுச்சேரியில் முழு வெற்றியடைய செய்வதற்காக கூடிய அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரி கூட்டமைப்பின் புதுச்சேரி மாநில  கூட்டம், இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுச்சேரி அரசு புதுச்சேரி மாநில தொழிலாளர்களின் நலனை முற்றாக புறக்கணிப்பதையும் விவாதித்து புதுச்சேரி அரசை வலியுறுத்தும் கோரிக்கைகளையும் இணைத்து (9.07.2025) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில்பங்கேற்பது, ஜூலை 9 புதுச்சேரியில், வேலை நிறுத்தம், முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என அனைத்து தொழிற்சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி 2025. ஜூலை.9 ஆம் தேதி புதுச்சேரியில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  புதிய பேருந்து நிலையம்,  சேதராப்பட்டு,  மதகடிப்பட்டு, திருக்கனூர், வில்லியனூர், அரியாங்குப்பம், பாகூர், காரைக்கால் ஆகிய மையங்களில் நடத்துவது.

 புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற்றிடு.அமைப்புசாரா தொழிலாளர், ஒப்பந்த தொழிலாளர், திட்டம் சார்ந்த தொழிலாளர் உட்பட அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000/- மாதமொன்றிற்கு நிர்ணயம் செய்திடு. ஒப்பந்த, தினக்கூலி, வெளிச்சந்தை முறை, பயிற்சியாளர் போன்ற பெயர்களில் நடக்கும் சுரண்டலுக்கு முடிவு கட்டு.  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடு!. 

பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்பவும் அமுலாக்கு, போனஸ், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை போன்றவைகளுக்கு உள்ள உச்சவரம்பை நீக்கு. பணிக்கொடை தொகையை அதிகப்படுத்து!

விண்ணப்பித்த 45 நாட்களுக்குள்ளாக தொழிற்சங்கத்தை பதிவு செய்வதை கட்டாயமாக்கு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, உணவு, மருந்து, வேளாண் இடுபொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்திடு, பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய கலால் வரியை கணிசமாக குறைத்திடு, உணவு பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தி, பொது விநியோக திட்டத்தை பரவலாக்கு போன்ற 21 அம்ச கோரிக்கையை முன்வைத்து பந்த் போராட்டம் நடைபெறும் என AITUC மாநில பொதுச் செயலாளர் K.சேதுசெல்வம் கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

On July 9 a bandh protest Unions announce together


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->