விஜயின் அரசியல் முடிவால் அதிர்ச்சி... திமுக கூட்டணி வெற்றிக்கு பாதிப்பு..? கனிமொழி பேட்டி!
DMK MP Kanimozhi say about TVK Vijay DMK 2026 Election
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி, தமிழக அரசியலில் நடந்துவரும் மாற்றங்கள் குறித்தும், த.வெ.க. போட்டி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அப்போது, "த.வெ.க. தனித்து தேர்தலில் போட்டியிடுவது திமுகவுக்கு சவாலாக இல்லை. அது, த.வெ.க.யும் பாஜகவும் தான் ஒருவருக்கொருவர் சவாலாக இருக்கலாம். பலர் தனித்துப் போட்டியிடலாம், அது அவர்களது தேர்வு. அதற்காக திமுக கூட்டணிக்கு வெற்றியில் பாதிப்பு ஏற்படாது. மக்கள் தரும் ஆதரவை பார்க்கும் போது திமுக கூட்டணி முன்னணியில் இருப்பது தெளிவாக தெரிகிறது" என்றார்.
மேலும், "தமிழ்நாடு தொடக்கத்திலிருந்தே ஒரே அணியில் இருந்து செயல்பட்டு வருகிறது. யாரை கூட்டணியில் இணைக்க வேண்டும் என்பது முதல்வரின் முடிவு. அவர் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் எவரும் கூட்டணியில் இணையலாம்.
விஜய் தனது அரசியல் முடிவுகளை எடுத்திருக்கிறார். அதனால் சிலர் அதிர்ச்சியடைந்திருக்கலாம். ஆனால் மக்கள் யாருக்கெதிராக இருக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்" எனவும் கனிமொழி தெரிவித்தார்.
English Summary
DMK MP Kanimozhi say about TVK Vijay DMK 2026 Election