#ஈரோடு || வயதான தம்பதிகள் திட்டமிட்டு படுகொலை! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஒட்டன்குட்டை கரியாங்காட்டை சேர்ந்த விவசாயி முத்துசாமி (85) மற்றும் அவரது மனைவி சாமியாத்தாள் (74) ஆகியோர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு வசந்தி, கவிதா, கலையரசி 3 மகள்கள் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

நேற்று இரவு முத்துசாமியும், சாமியாத்தாளும் வழக்கம்போல் உறங்கிய நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் முத்துசாமி வீட்டு கதவை கம்பியால் நெம்பி கதவை திறந்து உள்ளே நுழைந்துள்ளனர். தூங்கி கொண்டிருந்த முத்துசாமியை இரும்பு கம்பியால் தாக்கியும், அரிவாளால் வெட்டியுள்ளனர் அதனால் ஏற்பட்ட சத்தம் கேட்டு எழுந்த சாமியாத்தாளையும் மர்மநபர்கள் இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில் முத்துசாமியும், சாமியாத்தாளும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளனர்.

முத்துசாமியின் மகள் கலையரசியின் மகனான அஜித்(23) தனது தாத்தா, பாட்டியை பார்ப்பதற்காக இன்று காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்திருந்ததால் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டில் தாத்தாவும், பாட்டியும் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அமைந்து கூச்சலிட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சென்னிமலை டிஎஸ்பி ஜெயபாலு தலைமையிலான போலீஸார் முத்துசாமி, சாமியாத்தாள் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.

இதனை அடுத்து மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டு சோதனை செய்ததில் வாழைத்தோட்டம் மற்றும் அருகே உள்ள சாலையில் சிறிது தூரம் ஓடி நின்றது. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலை சம்பவம் நடந்த வீட்டில் பதிவான கைரேகைகள், தடயங்களை கைப்பற்றினர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் நகை, பணத்திற்காக இந்த கொலை நடந்ததை உறுதி செய்துள்ளனர். மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகை, அவர் கையில் அணிந்திருந்த மோதிரம், வளையல்கள் திருடப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முத்துசாமியின் வீட்டில் வளா்த்த நாய்க்கு விஷம் தடவிய உணவுப் பொருட்களை சாப்பிட்டு கொலை செய்துள்ள தகவலும் கிடைத்துள்ளதால் திட்டமிட்டு கொலை கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சென்னிமலை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Old age couple murdered near Chennimalai erode


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->