ரோலக்ஸ் யானையின் ஆவேசம்! மயக்க ஊசி செலுத்த வந்த மருத்துவர் படுகாயம்..! நடந்தது என்ன...? - Seithipunal
Seithipunal


கோவை மாவட்ட நரசீபுரம் பகுதியை அச்சுறுத்தி வந்த ‘ரோலக்ஸ்’ என்ற ஒற்றை காட்டு யானை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கிராமங்களில் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்ததால், வனத்துறையினர் பல நாட்களாக இரவு பகலாகக் கண்காணித்து வந்தனர்.

இதனிடையே,நேற்று அதிகாலை 1 மணியளவில், தொண்டாமுத்தூர் தேவராயபுரம் அருகே பரமேஸ்வரன்பாளையத்தில் உள்ள வாழைத்தோட்டத்தில் இருந்த யானைக்கு, மருத்துவர் விஜயராகவன் மயக்க ஊசி செலுத்த முயன்றார்.

அதனை உணர்ந்த யானை திடீரென அவரை நோக்கி பாய்ந்து, தும்பிக்கையால் அடித்து தரையில் தள்ளியது.இந்த தாக்குதலில் விஜயராகவனின் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவருக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சம்பவத்தின் போது பறக்கவிடப்பட்ட ட்ரோன் கேமராவின் சத்தத்தால் யானை பதற்றமடைந்து மிரண்டுபோனது.அதுவே தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, ‘ரோலக்ஸ்’ யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் நடவடிக்கையை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

obsession Rolex elephant doctor who came administer anesthetic seriously injured What happened


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->