முதலமைச்சர் விஜய் குறித்து ஆபாச பேச்சு...! - திமுக ஆதரவாளர் அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் ராஜா, பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. திமுக ஆதரவாளராக அறியப்படும் அவர், சமூக வலைதளங்களில் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், முதல் அமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாச கருத்துகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கோவை சிறுமி கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து, முதல் அமைச்சர் விஜயை விமர்சிக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் வீடியோக்களை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, ஜேம்ஸ் ராஜா மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், திருநெல்வேலி காவலர்கள் நடவடிக்கையில் இறங்கினர். முதல் அமைச்சர் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், ஜேம்ஸ் ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, காவலர்கள் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Obscene remarks about Chief Minister Vijay DMK supporter arrested action


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->