திடீர் ஷாக்: சென்னையில் திறக்கப்படாத டாஸ்மாக் கடைகள்...! - செய்வதறியாது திகைத்து நிற்கும் மதுப்பிரியர்கள்...! - Seithipunal
Seithipunal


காலி மதுபாட்டில்களை திரும்ப பெற தனி பணியாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த பணியாளர்கள் இன்று சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், பின்னர் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரை சந்தித்து மனுவையும் வழங்கினர். இந்த போராட்டத்தின் எதிரொலியாக, இன்று மதியம் 12 மணி வரை சென்னையின் பல டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்தது.

இதனால் மது வாங்க வந்த மதுப்பிரியர்கள் கடைகள் மூடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் கடைகள் முன்பு நீண்ட நேரம் காத்திருந்தவர்களிடையே பரபரப்பும் நிலவியது.இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்த பேச்சுவார்த்தையின் போது, காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அவர் உறுதியளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், இனிமேல் எந்தவித பிரச்சினைகள் ஏற்பட்டாலும் நேரடியாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், போராட்ட மனநிலையை தவிர்க்க வேண்டும் என்றும் நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தை வாபஸ் பெற தொழிற்சங்கங்கள் முடிவு செய்ததையடுத்து, டாஸ்மாக் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இருப்பினும், மதியம் வரை கடைகள் செயல்படாததால் மதுப்பிரியர்கள் கடும் அதிருப்தியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sudden shock Tasmac shops not opening Chennai Alcohol lovers stand stunned and dont know what to do


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->