அதிரடி ஆணை: சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தால் கடும் நடவடிக்கை...! - முதலமைச்சர் விஜய் கண்டிப்பு - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அதிகரித்து வரும் சட்டம் ஒழுங்கு சவால்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்பாக முதல் அமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று முக்கிய ஆய்வுக்கூட்டம் நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த உயர்மட்ட ஆலோசனையில் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை மூத்த நிர்வாகிகள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு விரைவாகவும் கடுமையாகவும் தண்டனை பெற்றுத்தர அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது, சமூக விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் வழக்குகளை விரைந்து விசாரித்து நீதிமன்றத்தில் துரிதமாக நடத்துவது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலியல் குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தாமதமின்றி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும், வழக்குகளை சட்ட ரீதியாக வலுவாக முன்னெடுத்து குற்றச்செயல்களில் ஈடுபட திட்டமிடுவோருக்கே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றும் முதல் அமைச்சர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முக்கிய ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் மரியம் பல்லவி பல்தேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல், காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர், காவல்துறை கூடுதல் இயக்குநர்கள் மஹேஷ்வர் தயாள், அனிதா ஹூசைன், காவல்துறை தலைவர்கள் சி. ராஜேஸ்வரி, ஆஸ்ரா கர்க், கே. பவானீஸ்வரி மற்றும் பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்று சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Action Order Strict action taken if law and order disrupted Chief Minister Vijay Kandipu


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->