இனி பைக் சாகசம் காமிச்சா ஜெயில்தான்...! சென்னையில் ஆபத்தான முறையில் பைக் ஓட்டிய கல்லூரி மாணவர்களுக்கு காவலர்கள் வச்ச ஆப்பு என்ன தெரியுமா...?
Now bike adventure cause Jail Do you know what cops did college students who rode bikes dangerously Chennai
சென்னையின் பரபரப்பான ராயப்பேட்டை கதீட்ரல் சாலையில், சாலை விதிகளை முற்றிலும் புறக்கணித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் அதிவேக சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெரினா கடற்கரையை நோக்கி இரண்டு இருசக்கர வாகனங்களில் சென்ற இளைஞர்கள், பொதுமக்களின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் அபாயகரமான முறையில் வாகனங்களை இயக்கியுள்ளனர்.

சாகசம் என்ற பெயரில் அவர்கள் மேற்கொண்ட இந்த ஆபத்தான பயணத்தை சிலர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், அந்த காட்சிகள் வேகமாக பரவி பெரும் கவனத்தை ஈர்த்தன.
இதையடுத்து, வைரலான காணொளியின் அடிப்படையில் மயிலாப்பூர் போக்குவரத்து காவலர்கள் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில், அதிவேகமாகவும் அசட்டுத்தனமாகவும் இருசக்கர வாகனங்களை இயக்கியவர்கள் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த தணிகவேல் (19) மற்றும் பூந்தமல்லியைச் சேர்ந்த சந்தோஷ் (19) என்பது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, இருவரையும் காவலர்கள் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தினர். கைது செய்யப்பட்ட இருவரும் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Now bike adventure cause Jail Do you know what cops did college students who rode bikes dangerously Chennai