ஓடும் பேருந்தில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் - கையும் களவுமாக சிக்கிய வடமாநில இளைஞர்.!  - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்த நுங்கம்பாக்கத்தில் இருந்து மாநகர பேருந்து ஒன்று நேற்று முன்தினம் மாலை புரசைவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவி ஒருவருடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையடுத்து பேருந்து கீழ்ப்பாக்கம் பகுதிக்கு வரும் போது திடீரென மாணவி கத்திக் கூச்சலிட்டார். பின்னர் வாலிபருக்கும் பளார் என்று அறைவிட்டார். உடனே அங்கிருந்த மற்ற பயணிகளும் சேர்ந்து அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். 

பின்னர், பயணிகள் பேருந்தை நிறுத்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த வாலிபரைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராமு என்பதும், ஓட்டேரியில் நண்பருடன் தங்கி கூலி வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. 

தொடர்ந்து போலீசார் அந்த வாலிபர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

north state youth arrest in chennai for harassment in running bus


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->