விரைவில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அசைவ உணவகங்கள் மூடல்.!
Non veg restaurants closed in thiruvannaamalai kirivalam place
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் ஒவ்வொரு மாத பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று கோவிலில் தான் சாமி தரிசனம் செய்கின்றனர்.
இதில் பௌர்ணமி கிரிவலம் நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் திருவண்ணாமலைக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் நேற்று பல்வேறு மடங்கள் மற்றும் சமய அமைப்புகளின் சாதுக்கள் மற்றும் தலைவர்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது சாதுக்களுக்கு அன்னதானம் வழங்கிய பிறகு ஆளுநர் ரவி பேசுகையில், திருவண்ணாமலை கிரிவல பாதையில் அசைவ உணவகங்கள் இருப்பதற்கு அனுமதி கிடையாது. அசைவ உணவுகளை அகற்ற வேண்டும் என்று சாதுக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனவே திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள அசைவ உணவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்பதே சனாதான தர்மமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Non veg restaurants closed in thiruvannaamalai kirivalam place