யாரா இருக்கும்?எங்கே ஓடி, ஒளிந்தாலும் உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும்...!- எச்.ராஜா
No matter where you run and hide one who eats salt must drink water H Raja
பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் ''எச்.ராஜா'' அவர்கள், மதுரை மாவட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"டாஸ்மாக் ஊழலில் அமலாக்கத்துறை அறிக்கை வந்தவுடன் தி.மு.க. அரசுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமலாக்கத்துறைக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகாமல் ரித்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.எங்கே ஓடி, ஒழிந்தாலும் உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் குடும்பமே டாஸ்மாக் ஊழலில் ஈடுபட்டுள்ளது.
இந்த ஊழல் விவகாரம் குறித்த தகவல்கள் தி.மு.க. அரசுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பே தெரியும்.ஊழலை மடைமாற்றும் விதமாக தி.மு.க. அரசு மும்மொழி கொள்கை குறித்து பேசியது அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பின்னர் இந்த ஊழலில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என தெரியவரும்.
ஆப்ரேசன் சிந்தூரில் ஆகாஷ், பிரமோஷ் ஏவுகணைகள் ரியல் ஹீரோவாக செயல்பட்டுள்ளது. பாகிஸ்தான் வேண்டுகோளுக்கு இணங்க போர் நிறுத்தும் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் போர் மோடியின் பலவீனத்தை காட்டுகிறது என தமிழகத்தில் உள்ள முட்டாள்கள் பேசியுள்ளனர். நாட்டிற்கு எதிராக செயல்படுவதை ராகுல்காந்தி வழக்கமாக கொண்டுள்ளார்.
போரில் பாகிஸ்தான் இந்தியாவிடம் மண்டியிட்டு உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.இந்த விமர்சனங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
English Summary
No matter where you run and hide one who eats salt must drink water H Raja