அதிமுக உடனும் கூட்டணி இல்லை! ஆதவ் அர்ஜுனாவிற்கு அருகதை இல்லை - அதிமுக பதிலடி!
ADMK TVK Alliance issue Aadhav Arjuna
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா, "பாஜகவும், திமுகவும் எங்கள் கொள்கை எதிரிகள். பாஜக, திமுகவோடு த.வெ.க கூட்டணி அமைக்காது.

பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால், அதிமுக உடனும் கூட்டணி இல்லை. சமீபத்திய தேர்தல்களில் தோற்று வரும் அதிமுகவோடு ஏன் த.வெ.க கூட்டணி அமைக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் இதற்க்கு பதிலடி கொடுத்துள்ள அதிமுக ஐடி விங்க், "தொழிலதிபராக இருந்து, "திடீர்" அரசியல்வாதியாகி, பல கட்சி தாவுவதில் கைதேர்ந்த வித்தகரான ஆதவ் அர்ஜுனாவிற்கு அதிமுக பற்றி பேச எள்ளளவும் அருகதை இல்லை.
இன்று த.வெ.க.-வில் அமர்ந்துகொண்டு கருத்து கூறும் நீங்கள், நாளை எந்தக் கட்சியில் இருப்பீர்கள் என்று தெரியவில்லை. எனவே, உங்கள் கருத்துக்கு பதில் அவசியம் இல்லை" என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK TVK Alliance issue Aadhav Arjuna