இட்லி கடை நோ தடை! அந்த "மேலிடம்" யார்? அந்த சிகப்பு பூதம் யார்? அதிரவைக்கும்  அதிமுக! - Seithipunal
Seithipunal


அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், DAWN (விடியல்) பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் படம் மட்டும் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று உத்தரவிட்ட "மேலிடம்" யார்?

மூத்த இயக்குனரும், FEFSI அமைப்பின் தலைவருமான ஆர்.கே. செல்வமணி அவர்களையே Influnce செய்யக்கூடிய, இன்னும் சொல்லப்போனால் Dominate செய்யக்கூடிய அளவிற்கு, சினிமாவின் மேலிடமாக கருதப்படும் அந்த சிகப்பு பூதம் யார்?

ஆகாஷ் பாஸ்கரன் படத்திற்கு எதற்கு இந்த சலுகை? Dawn பிக்சர்ஸுக்கும் மேலிடத்திற்கும் என்ன தொடர்பு? யார்_அந்த_தம்பி? என்று தெரிவித்துள்ளது.

மேலும், டாஸ்மாக் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் #யார்_அந்த_தியாகி என சுவரொட்டி ஒட்டப்பட்ட நிலையில், தற்போது யார்_அந்த_தம்பி என்ற கேள்வியை சுட்டிக்காட்டி மதுரை மற்றும் சேலம் பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் அதிமுக ஐடி விங்க் தெரிவித்துள்ளது.

மேலும், தியாகியின் துணை நின்ற முதன்மையானவர் யார்?
தம்பியின் துணை நின்ற துணை முதன்மையானவர் யார்?

யார் அந்த சார்?
யார் அந்த தியாகி?
யார் அந்த தம்பி?
என இவை அனைத்திற்கும் உண்மையான பதில் கிடைக்கும் வரை தமிழகம் முழுவதும் சுவரொட்டிகளின் பயணம் தொடரும்" என்றும் அதிமுக ஐடி விங்க் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK IT Wing condemn to DMK Idly Kadai Dawn TASMAC Scam


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->