திமுக அமைச்சரின் பி.ஏ.-வுக்கு இரையாக்க முயற்சித்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது - காவல்துறை விளக்கம்!
Arakonam Incident DMK TN Police statement
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயலைக் குறித்து, ஒரு கல்லூரி மாணவி கொடுத்துள்ள வன்கொடுமை குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெய்வச்செயல் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, பல இளம் பெண்களை திருமணம் என்ற பெயரில் ஏமாற்றி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துகிறார் என்றும், இதுவரை சுமார் 20 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திமுக அமைச்சரின் P.A விற்கு தன்னை இரையாக்க முயன்றதாகவும் அந்த மாணவி தெரிவித்திருந்தார்..
மேலும், பாலியல் வன்கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்தபோதும், அதனை முறையாக விசாரிக்காமல், தன்னை குற்றவாளி போலவே காவல்துறை நடத்தி வருவதாகவும் மாணவி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அரசியல் தலையீடு காரணமாக தெய்வச்செயலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவே போலீசாருக்கு தயக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட, சம்பந்தப்பட்ட மாணவியின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீசார் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதேசமயம், சம்பவம் குறித்துப் போலீஸ் தரப்பிலும் விரைவில் அதிகாரபூர்வ விளக்கம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காவல்துறை தரப்பில் அளித்த விளக்கத்தில், "அரசியல் கட்சியினர் தலையீட்டால்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறுவது தவறு
10ஆம் தேதி அன்றே அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 20 வயதுள்ள பெண்கள் 20 பேர் பாதிப்பு என்று கூறும் பெண் அவர்களை பறறிய தகவல்களை கூறவில்லை.
அரசியல் பிரமுகரின் பி.ஏ.-வுக்கு இரையாக்க முயற்சித்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது" என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
English Summary
Arakonam Incident DMK TN Police statement