3-வது நபரால் தான் எங்கள் வாழ்வில் விரிசல் விழுந்தது...! - ஆர்த்தி ரவி
third person caused a crack in our lives Aarthi Ravi
நடிகர் ரவி மோகன் மற்றும் மனைவி ஆர்த்தி ரவி, இருவரும் பிரிந்ததிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் கிளப்பின.அதில் பாடகி கெனிஷா, நடிகர் ரவியுடன் ஒன்றாக சுற்றத் தொடங்கியதிலிருந்து அவர்களை பற்றிய கிசுகிசுக்கள் பெரியளவில் பேசப்பட்டது.இதில், ஒருபக்கம் மனைவி ஆர்த்தி ஒரு அறிக்கை வெளியிட, மறுபுறம் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து ரவி மோகன் மற்றொரு அறிக்கை வெளியிட்டார்.

அதே சமயம், ரவி மோகனின் மாமியார் வெளியிட்ட அறிக்கையும் பரபரப்பாக பேசப்பட்டது. அதில், ரவிமோகனும், ஆர்த்தியும் சேர்ந்து வாழ வேண்டும் என தான் விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த சர்ச்சைக்கு இடையே, கெனிஷா தனது இன்ஸ்டா இணையதளத்தில் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
கெனிஷா:
அதில், ''இந்த சத்தங்களுக்கு இடையே அமைதியான நம்பிக்கை ஒன்று காத்திருக்கிறது. எனது ஆன்மாவின் கஷ்டம் தனியாகத்தான் நிற்கிறது. அதேசமயம் அவையெல்லாம் மன உறுதியை கொடுக்கின்றன.இப்போதுள்ள சூழலில் நான் இசையை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். காயங்களை பாடங்களாக ஏற்றுக்கொள்கிறேன். நாளைய விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிக்கிறது'', என்று பதிவிட்டுள்ளார்.
ஆர்த்தி:
இந்நிலையில் பாடகி கெனிஷாவை மறைமுகமாக சுட்டிக்காட்டி ரவி மோகனின் மனைவி ஆர்த்தி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது,"உங்கள் வாழ்வின் ஒளி என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வில் இருளை கொண்டுவந்தார் என்பதே உண்மை.சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் முன்பே 3-வது நபர் எங்கள் வாழ்வில் வந்துவிட்டார்.
எங்கள் வாழ்வில் 3-வது நபரின் வருகையை வெற்றுக் குற்றச்சாட்டாக அல்ல மாறாக போதுமான ஆதாரத்துடன் தான் தெரிவிக்கிறேன்.கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ளது இந்த காலத்தில்.
என்னை சுற்றி நடக்கும் சமீபத்திய சூழ்ச்சிகளால் வேறு வழியின்றி என்னை மீண்டும் பேசும்படி செய்துவிட்டது.என் பிடியிலிருந்து தப்ப நினைத்தால் அவர் தொலைத்ததாக தெரிவித்தால் பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்.எங்கள் வாழ்வில் அதிக சேதத்தை உண்டாக்கியவர் வீட்டின் கதவை ஏன் தட்டினார்.
துன்புறுத்தப்பட்டதாக தனிமைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கும் ரவி ஏன் ஒவ்வொரு வருடமும் திருமண நாளை கொண்டாடினார்" எனத் தெரிவித்துள்ளார்.இந்தச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகிறது.வேகமாக மக்களிடையே இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
third person caused a crack in our lives Aarthi Ravi